Hong Kong Fire Accident (Photo Credit: @Washington_Rep X)

நவம்பர் 29, ஹாங்காங் (World News): ஹாங்காங் தை போ மாவட்டத்தில் அமைந்துள்ள வாங் புக் கோர்ட் என்ற பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், முன் தினம் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. 5 உயரமான குடியிருப்பு கட்டிடங்களுக்கு தீ வேகமாக பரவியதால், முழு பகுதியும் கரும்புகை மூட்டத்தால் சூழப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். Sri Lanka Floods: டிட்வா புயலின் கோரம்.. 56 உயிர்களை பறித்த கனமழை.. இலங்கையில் சோகம்.! 

தீயணைப்பு துறையின் நீண்ட போராட்டம்:

தீ ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே பெரும் புகை பரவியதால் பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்படுத்த முடிந்தது. 1,984 வீடுகளைக் கொண்ட இந்த வளாகத்தில் சுமார் 5,000 பேர் வசித்து வந்தனர்.

உயிரிழப்பு 128–ஆக உயர்வு:

தீ விபத்துக்குப் பின்னர் ஆரம்பத்தில் 94 உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது பலரும் சிக்கியிருந்த பகுதிகளில் இருந்து உடல்கள் கிடைத்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மருத்துவமனைகளில் 79 பேர் சிகிச்சையில் உள்ளனர். 200–க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளார் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மீட்பு மற்றும் தேடுதல் பணி:

கட்டிடத்தின் பல பகுதிகள் சரிந்து விழுந்த நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை கண்டறிய தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவி மற்றும் தற்காலிக வசதிகள் வழங்கப்படுகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தின் பதறவைக்கும் காட்சிகள்: