செப்டம்பர் 13, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில் கிரேட்டர் கைலாஷ் (Greater Kailash) பகுதியில் நாதிர்ஷா என்ற ரவுடி சுட்டுக்கொலை (Shot Dead) செய்யப்பட்டார். நேற்று (செப்டம்பர் 12) இரவு 10.30 மணியளவில் ஜிம்மிற்கு (Gym) வெளியே நின்றுக் கொண்டிருந்த ஜிம் உரிமையாளர் நாதிர்ஷாவை மர்ம நபர் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் தப்பி சென்றார். இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. Doctor Rape And Murder Case: 'நான் ராஜினாமா செய்ய தயார்...' மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு..!
இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இதன் முதற்கட்ட விசாரணையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நாதிர்ஷா முன்விரோதம் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். ரோஹித் கோதாரா என்ற மற்றொரு நபர் கொலைக்கு ஆதரவாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக்கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி:
राजधानी दिल्ली के ग्रेटर कैलाश में बदमाशों द्वारा बीच सड़क व्यापारी को गोलियों से भुना, मौके पर मौत. इलाके के व्यापारियों में बढ़ी दहशत#GK #firing #viralvideo #DELHIMETRO pic.twitter.com/sVe46AdAo3
— Abhishek Nayan (ABP News) (@Abhisheknayan81) September 13, 2024