Son Beat The Mother To Death: தாயுடன் ஏற்பட்ட தகராறு; தாயை அடித்து கொடூர கொலை..! மகன் வெறிச்செயல்..!
மத்திய பிரதேசத்தில் தனது தாயை கட்டையால் அடித்து அவரது மகன் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மே 25, ரத்லம் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரத்லம் மாவட்டம், சரவன் கிராமத்தை சேர்ந்த தம்பதி மாலியா பீல்-ஜீவாபாய் (வயது 65). இத்தம்பதிக்கு ஆஷாராம் (வயது 30) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு உணவு தொடர்பாக ஆஷாராமுக்கும் அவரது தாயாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அவரது தந்தை ஆஷாராமை கண்டித்துள்ளார். இதனால் அவர கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். Theni Shocker: பொக்லைனை வாடகைக்கு வாங்கிச்சென்று, அக்கக்காக பிரித்து விற்பனை செய்த கும்பல்.. தேனியில் பகீர்.!
இதனையடுத்து, நள்ளிரவில் அவரது தந்தை உறங்கிய பிறகு வீட்டிற்கு சென்றுள்ள ஆஷாராம், தனது தாயை கட்டை மற்றும் செங்கற்களால் பலமாக (Mother Murder) தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அடுத்து, அவரது உடலை வீட்டின் அருகில் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்க விட்டுள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தவாறு காண்பிக்க இவ்வாறு செய்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து மாலியா பீல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ஜீவாபாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சேர்த்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள ஆஷாராமை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
(The above story first appeared on LatestLY on May 25, 2024 10:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

