Cheating Husband Caught by Wife: ஸ்பா தோழியுடன் உல்லாசம்; கணவனை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்த மனைவி.!

ஸ்பாவில் பழக்கமான பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வந்த கணவர், மனைவியால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் விசாகப்பட்டினத்தில் நடந்துள்ளது.

Cheating Husband Caught by Wife: ஸ்பா தோழியுடன் உல்லாசம்; கணவனை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்த மனைவி.!
Illicit Affair Husband Caught by Wife (Photo Credit: @TeluguScribe X)

ஜூலை 19, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் விவேக். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே, கடந்த சில மாதமாகவே விவேக்கின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள்து. எப்போதும் எதோ ஒரு காரணத்தை கூறி வெளியே சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

உறுதியான மனைவியின் சந்தேகம்:

இதனால் கணவனின் (illicit Affair Husband Captured by Wife in Vizag) நடத்தை மீது சந்தேகமடைந்த மனைவி, கணவரை கண்காணிக்க தொடங்கியுள்ளார். சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக கணவர் புறப்பட்டு சென்ற நிலையில், மனைவி அவரை உறவினர்களுடன் பின்தொடர்ந்து இருக்கிறார். மனைவியின் சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில், கணவர் பந்த்ராம் பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டிற்குள் சென்றுள்ளார். Cuddalore Shocker: கடலூரை உலுக்கிய பயங்கர சம்பவம்; 3 பேரை எரித்துக்கொன்றது ஏன்?.. கைதான கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்.! 

கையும் களவுமாக பிடித்த மனைவி:

அங்கு தனது தோழியுடன் அவர் உல்லாசமாக இருந்த நிலையில், உறவினர்களுடன் விவேக்கின் மனைவி கணவரை பிடித்து சரமாரியாக அடித்து நொறுக்கினார். மேலும், விவேக்கின் புதிய தோழிக்கும் தர்ம அடி கொடுக்கப்பட்டது. பின் காவல் நிலையத்தில் விவேக் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்பா பழக்கத்துக்கு பின் கள்ளக்காதல்:

முதற்கட்ட விசாரணையில் ஸ்பாவுக்கு சென்றுவந்தபோது இளம்பெண்ணுடன் பழக்கத்தை ஏற்படுத்திய விவேக், பின்னாளில் அவருடன் கள்ளக்காதல் உறவிலும் இருந்து வந்தார் என்பது அம்பலமானது. இதனால் அவ்வப்போது குடும்பத்தினரிடம் தனது மனைவியை விவாகரத்து செய்துவிடுவேன் எனவும் கூறி இருக்கிறார். மனைவி தனது கணவர் மற்றும் அவரின் புதிய காதலியை புரட்டியெடுத்த சம்பவம் குறித்த காணொளியும் வைரலாகி வருகிறது.

விவேக் தனது மனைவியை மறந்து கள்ளகாதலியுடன் திரையரங்கம், கடற்கரை என பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக சுற்றி வந்துள்ளார். இறுதியில் அவர் மனைவியிடம் வசமாக சிக்கிக்கொண்டுள்ளார்.

வைரல் வீடியோ உங்களின் பார்வைக்கு:

(The above story first appeared on LatestLY on Jul 19, 2024 10:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).