Minors Kill Sexual Assaulter: பாலியல் பலாத்காரம் செய்ததால் ஆத்திரம்: 25 வயது நபர் கொலை., உடல் எரிப்பு: 3 சிறார்கள் பரபரப்பு சம்பவம்.!

தனது நண்பனை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த 25 வயது இளைஞரை 3 சிறார்கள் ஒன்று சேர்ந்து கொன்று குவித்த சம்பவம் டெல்லியை அதிரவைத்துள்ளது.

Murder | Crime File Pic (Photo Credit: Pixabay / Pexels)

டிசம்பர் 25, புதுடெல்லி (New Delhi): டெல்லியில் உள்ள நிஜாமுதீன், பஸ்தி பகுதியில் உள்ள குஸ்ரோ பூங்காவில் ஒருவரின் சடலம் முகம் சிதைக்கப்பட்டு, அரைகுறையாக எரிந்தவாறு, அழுகிய நிலையில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தனிப்படை அமைத்து விசாரித்த அதிகாரிகள்: மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், உயிரிழந்தவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த ஆசாத் என்பது தெரியவந்துள்ளது. 25 வயதுடைய ஆசாத், அதே பகுதியை சேர்ந்த 3 சிறார் கும்பலால் கொலை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.

சிறுவன் பலாத்காரம்: இதனையடுத்து, சிறாரை கைது செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலமானது. அதாவது, ஆசாத் அப்பகுதியை சேர்ந்த இரண்டு 16 வயது சிறார்கள், 17 வயதுடைய சிறாரில் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் ஆசாத் மீது சிறார்கள் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர். Google Big Layoff?: 30 ஆயிரம் பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்கிறது கூகுள்?; அச்சத்தில் பணியாளர்கள்.!

3 பேர் சிறார் கும்பல் பரபரப்பு செயல்: நண்பன் பாதிக்கப்பட்டதால் வென்குண்டெழுந்த மூவரும் சேர்ந்து, சம்பவத்தன்று இரவு 10:00 மணிக்கு மேல் குஷ்ரோ பூங்காவுக்கு ஆசாத்தை அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஆசாத்தை கடுமையாக தாக்கி, முகத்தை சிதைத்து கொலை செய்துள்ளனர். பின் கொலையை மறைக்க உடலின் மீது மரக்கட்டைகள் போட்டு, பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தி இருக்கின்றனர்.

விசாரணையில் அம்பலமான உண்மை: ஆனால், உடல் முழுவதும் எரியாமல் அரைகுறையாக எரிந்து, 2 நாட்களுக்கு பின் துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்து, அதிகாரிகள் உடலை மீட்டு விசாரணை நடத்தியதைத்தொடர்ந்து உண்மை அம்பலமாகியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக சிறார்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement