ஏப்ரல் 13, பானாஜி (Goa Crime News): கோவாவில் உள்ள தெற்கு கோவா, வாஸ்கோ பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறும் கட்டிடம் ஒன்று உள்ளது. அங்கு 20 தொழிலாளர்கள் வேலைபார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று கட்டிடத்தில் இருந்து 5 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.

பலாத்காரம் (6 Aged Minor Girl Rape Killed in Goa) & கொலை: இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் பலாத்காரத்தால் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனால் சிறுமியின் மரணம் தொடர்பாக போக்ஸோ உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Fishing Prohibition Period: மீன்பிடி தடைக்காலம் அமல்; ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் தொடக்கம்..!

தொழிலாளர்கள் மீது சந்தேகம்: முதற்கட்ட விசாரணையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட கட்டிடத்தில் 15 முதல் 20 தொழிலாளர்கள் பணியாற்றி வருவதால், அவர்கள் அனைவரும் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே குற்றவாளி குறித்த தகவல் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.