Gaming Zone Fire Video: வெல்டிங் பணிகளின் போது நடந்த துயரம்; 35 பேரின் உயிரைக்குடித்த தீ விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.!
கேமிங் சென்டரில் திடீரென பிடித்த தீ மளமளவென பரவிய நிலையில், உற்சாகமாக குடும்பத்துடன் பொழுதை கழித்துக்கொண்டு இருந்த பலரும் பரிதாபமாக உயிரிழந்த சோகம் ராஜ்கோட்டில் நடந்துள்ளது.
மே 27, ராஜ்கோட் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் நகரில் செயல்பட்டு வந்த டிஆர்பி (Rajkot TRP Gaming Center Fire Accident) கேமிங் மாலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தீ விபத்தில், பலரும் மூச்சு திணறியும், தீயில் சிக்கி உடல் குறுகியும் பலியாகி இருந்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அங்குள்ள விரேந்திர சிங் குடும்பத்தை சேர்ந்த ஏழு நபர்கள் உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. KKR Won IPL 2024 Trophy: உப்பு-சப்பு இல்லாமல் முடிந்த ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி; கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி.. கலங்கிப்போன ஹைதராபாத்.!
பதறவைக்கும் காட்சிகள் வெளியீடு: வீரேந்திர சிங் மற்றும் அவரது மனைவி, மகன், உறவினர்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் டிஎன்ஏ ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விபத்து நடந்ததன் சிசிடிவி காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. வெல்டிங் வைக்கும் பணியின் போது ஏற்பட்ட தீ விபத்து, 35 பேரின் உயிரைப் பறித்தது அம்பலமாகி இருக்கிறது. மேலும், சட்டவிரோத முறையில் கேரிங் சென்டர் நடத்தி வந்தால், அதன் உரிமையாளரையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
CCTV footage of the Rajkot TRP Gaming Fire Tragedy.
In just a few minutes the fire engulfed the entire game zone, killing 27. pic.twitter.com/nq0c67pYKM
— Meghna Dev (@) May 26, 2024
(The above story first appeared on LatestLY on May 27, 2024 07:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

