Father Killed Children: நண்பனுக்கு சாட்சி கையெழுத்து போட்டு கடனாளியான குடும்பத்தலைவர்; 2 குழந்தைகளை கொன்று, தானும் தற்கொலை.!

நண்பன் கடனை சரியாக செலுத்திவிடுவான் என சாட்சி கையெழுத்து போட்ட நபர், தனது குழந்தைகளை கொலை செய்து தானும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Father Killed Children: நண்பனுக்கு சாட்சி கையெழுத்து போட்டு கடனாளியான குடும்பத்தலைவர்; 2 குழந்தைகளை கொன்று, தானும் தற்கொலை.!
Crime File Picture (Photo Credit: Pixabay)

நவம்பர் 06, பஹதர்கர்க் (Haryana News): ஹரியானா மாநிலத்தில் உள்ள பஹதுர்கர்க் பகுதியில் வசித்து வருபவர் கர்மவீர். இவருக்கு மனைவி மற்றும் 13 வயதுடைய முஸ்கன் என்ற மகனும், தனுஷி என்ற 11 வயதுடைய மகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில், கர்மவீரர் தனது நண்பரான நவீன் என்பவருக்கு கார் வாங்க சாட்சி கையெழுத்து போட்ட நிலையில், அவர் சரிவர பணம் செலுத்தாததால், நிதி நிறுவன அதிகாரிகள் அவருக்கு சாட்சி கையெழுத்து போட்ட கர்மவீரை தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

இதனால் நண்பனின் கடனுக்காக அதிகாரிகளிடம் பதில் சொல்ல வழியில்லாமல், தனது நிலத்தை விற்பனை செய்து கடனை அடைக்கலம் என்ற முடிவுக்கு அவர் வந்துள்ளார்.

சாட்சி கையெழுத்து போட்டதற்கே கர்மவீரின் மனைவி கடும் சண்டையிட்ட நிலையில், நிலத்தை விற்பனை செய்யும் விவகாரம் தெரிய வந்ததால் குடும்பத்தில் தகராறு உருவாகியுள்ளது. IND Vs SA: 243 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை தக்கவைத்த இந்திய அணி; அனல்பறந்த பந்துகள்.!

இந்நிலையில், மனமடைந்து போன கர்மவீரர் தனது குழந்தைகளை கொலை செய்து தானும் தூக்கில் தொங்கி உயிரை விட்டார். கரம்வீரின் சகோதரர் எதற்ச்சையாக தனது சகோதரரின் வீட்டிற்கு நேற்று சென்றுள்ளார்.

அப்போது, தம்பி தூக்கில் சடலமாகவும், குழந்தைகள் கொலை செய்யப்பட்டும் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரம்பீர் குமார் தலைமையிலான அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வந்தனர்.

முதற்கட்டமாக தடயங்களை சேகரித்துவிட்டு, மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Nov 06, 2023 08:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).