36 முறை சதக்., சதக்.. பீர் பாட்டிலால் கணவனுக்கு நரகம் காட்டிய 17 வயது மைனர் மனைவி.. கொடூர கொலை.!

17 வயதுடைய மைனர் சிறுமி தனது கணவரை கொலை செய்து உடலை வீடியோ காலில் நண்பருக்கு காட்டிய பயங்கரம் பலரையும் அதிரவைத்துள்ளது.

36 முறை சதக்., சதக்.. பீர் பாட்டிலால் கணவனுக்கு நரகம் காட்டிய 17 வயது மைனர் மனைவி.. கொடூர கொலை.!
MP Husband Murder Case (Photo Credit: @timesofindia X)

ஏப்ரல் 18, புர்ஹான்பூர் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூரில், 25 வயதுடைய கணவரை கொலை செய்த 17 வயது மைனர் சிறுமியான மனைவி, கணவரின் உடலை வீடியோ காலில் காதலனுக்கு காண்பித்து அதிரவைத்துள்ளார். மேலும், கணவரை கொடூரத்தனமாக சுமார் 36 முறைகள் பீர் பாட்டிலால் சதக்., சதக் என குத்திப்படுகொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார். அங்குள்ள ஷாபூரில் வசித்து வரும் 25 வயதுடைய இளைஞர் ராகுல் கோல்டன், கடந்த ஏப்ரல் 13 அன்று ஐடிஐ கல்லூரியில் உள்ள புதரில் ரத்த வெள்ளத்துடன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அதிர்ச்சி உண்மையும் அம்பலமானது. அதாவது, ராகுலின் மைனர் மனைவி, அவரின் காதலர் யுவராஜ் (20) கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரின் காதல் காரணமாக சதித்திட்டம் தீட்டி ராகுல் கொலை செய்யப்பட்டார். கோவையில் மாணவி தற்கொலை.. அதிர்ச்சி திருப்பம்: கனவுக்கு கொள்ளிவைத்த கல்லூரி நிர்வாகம்? ஆடியோ வைரல்..! 

கொடூரமாக கொலை:

ஏப்ரல் 12ம் தேதி சுமார் இரவு 8 மணியளவில் ராகுலின் மனைவி கடைக்கு சென்று சாப்பிடலாம் என கணவரை அழைத்துச்சென்றுள்ளார். பின் இருவரும் வீடு திரும்பும் வழியில் செருப்பை கீழே தவறிவிட்டதுபோல் நடித்து கொலை சம்பவத்துக்கு வித்திட்டுள்ளார். பின் சிறுமியின் காதலர் யுவராஜ் ஏற்பாடு செய்த அவரின் நண்பர்கள் லலித் (20), மைனர் சிறுவன் என 2 பேர் கும்பல் ராகுலை புதருக்குள் இழுத்துச் சென்று கொலை செய்துள்ளனர். முதலில் ராகுலின் மனைவி கணவரை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். பின் அவரின் காதலருக்கு தொடர்பு கொண்டு வீடியோ காலில் கணவரை கொலை செய்வதை காண்பித்துள்ளார். ஆத்திரத்தில் மொத்தமாக 36 முறை பீர் பாட்டிலால் தாக்கி கொலை நடந்துள்ளது.

(The above story first appeared on LatestLY on Apr 18, 2025 06:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).