
ஜூன் 07, குவாலியர் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர், டிகோனியா பகுதியில் வசித்து வருபவர் நேபாள் சிங் குஷ்வாஹா. இவருக்கு திருமணம் முடிந்து மனைஇவ், 8 வயதுடைய ஷிவா என்ற மகன் இருக்கிறார். சம்பவத்தன்று இதே பகுதியில் வசித்து வரும் இளைஞர்கள் மனோஜ், ஹேமந்த் சிறுவனுடன் இருந்தனர். மதியம் 01:30 மணியளவில் இவர்கள் சட்டவிரோதமாக மின்கம்பத்தில் இருந்து எடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டிக்க சிறுவனை தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். மின்கம்பியை தாங்கள் சொல்வதுபோல எடுத்து தந்தால் ரூ.20 பணம் கொடுப்பதாக கூறியுள்ளனர். Kanyakumari News: வெளிநாடு வேலைக்கு செல்ல காத்திருந்தவர் விபத்தில் பலி.. பிரியாணி வாங்கவந்தபோது சோகம்.! https://tamil.latestly.com/social-viral/in-kanyakumari-kaliyakkavilai-a-man-dies-an-accident-he-today-went-to-job-in-abroad-26016.html
மின்சாரம் தாக்கி சிறுவன் மரணம்:
சிறுவனும் அவர்களுடன் சென்றுள்ளார். அப்போது, சிறுவன் மின்சார கம்பியை பிடித்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கழிவுநீர் சாக்கடையில் விழுந்து பரிதாபமாக மரணம் அடைந்தார். சிறுவனை அழைத்துச் சென்ற இருவரும் வயரை எடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி சென்றனர். பின் சிறுவன் சாக்கடையில் கிடப்பதாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தபோது மரணமும் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வுசெய்தபோது உண்மை அம்பலமானது. விசாரணைக்கு பின்னர் இரண்டு இளைஞர்களையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
சிறுவன் உயிரிழந்த பதறவைக்கும் காணொளி:
ग्वालियर में 8 साल के मासूम की करंट लगने से मौत हो गई. पड़ोसी मनोज जाटव ने नाले में बिजली के तार निकालने के लिए मासूम शिवा उर्फ बाबू को 20 रुपये का लालच दिया था. घटना का सीसीटीवी सामने आया है. पुलिस ने शव को पोस्टमार्टम के लिए भेज दिया है. #Gwalior | #Crime pic.twitter.com/evUmnQygV0
— NDTV MP Chhattisgarh (@NDTVMPCG) June 6, 2025