Maharashtra Shocker: அரசியல்கட்சி பிரமுகர் நேரலையின்போதே சுட்டுக்கொலை; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.! பதற்றமான சூழல்.. மஹாராஷ்டிராவில் பேரதிர்ச்சி..!
மராட்டிய அரசியலில் பெரும் குழப்பமான சூழல் நிலவி வந்த நிலையில், முன்னாள் முதல்வரின் மகனுக்கு ஆதரவாக இருந்தவர் கொலை செய்யப்பட்டுள்ள பகீர் சம்பவம் நடந்துள்ளது.
பிப்ரவரி 09, மும்பை (Mumbai): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தாஹிசார் பகுதியில் வசித்து வருபவர் அபிஷேக் கோசல்கர் (Abhishek Ghosalkar). இவர் முன்னாள் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ மகன் ஆவார். நேற்று இவர் முகநூல் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இருந்தார். இவர் தனது பேட்டியை முடித்தபின்னர் எழுந்து நின்றுகொண்டு இருந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்த குண்டுகள்: அச்சமயம், அங்கு வந்த மர்ம நபர் சற்றும் எதிர்பாராத விதமாக அபிஷேக்கின் வயிற்று உட்பட உடல் பாகங்களில் துப்பாக்கியால் சுட்டார். நிலைகுலைந்த அவர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றும் பலனில்லை. உடலில் 3 முதல் நான்கு குண்டுகள் பாய்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள கருணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். Joe Biden: "அதிபர் தேர்தலுக்கு தகுதியானவர் நான் மட்டுமே" - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பெருமிதம்.!
குற்றவாளி தற்கொலை என தகவல்: மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட அபிஷேக்கை கொன்றதாக கூறப்படும் நேரொன்ஹா என்பவர், அங்கேயே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
தாக்கரேவின் மகனுக்கு நெருங்கியவர்: மறைந்த அபிஷேக் கோசல்கர் தற்போது பிரிந்துள்ள சிவசேனா கட்சியில் உத்தவ் தாக்கரே அணிக்கு ஆதரவானவர் ஆவார். உத்தவின் மகன் ஆதித்ய தாக்கரேவின் நெருங்கிய நட்பு வட்டாரத்திலும் இருந்து வந்துள்ளார். இவருக்கும் - நேரொன்ஹாவுக்கும் பிரச்சனை இருந்ததாகவும், சமீபத்தில் இருவரும் சமரசம் செய்துகொண்ட நிலையில் தான் நேரலையில் பேச நேரொன்ஹாவின் அவரது அலுவலகத்திற்கு வந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பதற்றமான சூழலால் காவல்துறை குவிப்பு: இந்த கொலை சம்பவத்தால் தஹிசார் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலை கட்டுக்குள் வைக்க காவல் துறையினர் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.
நேரலை முடிந்ததும் நடந்த கொலை: