மே 13, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் (Hyderabad Royal Enfield Bike Explodes), மோகல்புரா, பிபி பஜார் சாலையில் நேற்று ராயல் என்பீல்டு இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், அங்கு வாகனத்தின் அருகே இருந்த 10 பேர் மொத்தமாக தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டனர். ஒருவர் உடல் முழுவதும் எரிந்தவாறு படுகாயத்துடன் மீட்கப்பட்டார். இருசக்கர வாகனம் வெடித்து சிதறியதும் மக்கள் தலைதெறிக்க ஓட்டம்பிடித்த நிலையில், அங்கிருத்தவர்களில் சிலர் சுதாரிப்புடன் செயல்பட்டு உதவ முன்வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின் தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. Vaikasi Visakam 2024: முருக பக்தர்களே தயாரா? வைகாசி விசாகம் 2024..வழிபாடு முறைகள், விசேஷத்தை தெரிஞ்சிக்கோங்க.!
தீயை அணைக்க வந்தவர்களும் பாதிக்கப்பட்ட சோகம்: நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், விபத்தில் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களில் காவலர் ஒருவரும் காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகன ஒட்டி எஞ்சினில் திடீரென தீப்பிடித்ததை உணர்ந்து வாகனத்தில் இருந்து கீழே குதித்து தப்பி இருக்கிறார். வாகனத்தில் எரிந்துகொண்டு இருந்த தீயை கட்டுப்படுத்த சில வருகை தந்த நிலையில், எஞ்சினில் பரவிய தீ பெட்ரோல் டேங்க்குக்கும் சென்று தீப்பிடித்து விபத்து ஏற்பட்டு பலரும் காயமடைந்து இருக்கின்றனர்.
அதிர்ச்சியூட்டும் காட்சிகள் உங்களின் பார்வைக்கு:
Sensitive video
మంటల్లో కాలిపోతున్న పోలీస్ కానిస్టేబుల్ https://t.co/u52d9AYAuV pic.twitter.com/l2H7nMmoI4
— Telugu Scribe (@TeluguScribe) May 12, 2024