10-Year-Old Girl Dies: லாரி சக்கரம் ஏறி-இறங்கி 10 வயது சிறுமி பரிதாப பலி; நொடியில் நடந்த சோகம்.!

மழை பெய்யும் நேரத்தில், தவறான சமயத்தில் நகர வீதிகளில் பயணித்த லாரியால் 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

10-Year-Old Girl Dies: லாரி சக்கரம் ஏறி-இறங்கி 10 வயது சிறுமி பரிதாப பலி; நொடியில் நடந்த சோகம்.!
Truck Two Wheeler Collision (Photo Credit: @TeluguScribe X)

ஜூலை 31, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் (Hyderabad), ஹப்ஸிகுடா பகுதியை சேர்ந்த பெண்மணி சந்தோஷி. இவருக்கு காமேஸ்வரி, வேதான்ஷ் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சந்தோஷியின் 10 வயது மகள் காமேஸ்வரி, அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 29ம் தேதி காமேஸ்வரி தனது சகோதரருடன் வழக்கமாக பள்ளிக்கு சென்றுள்ளார். பின் மாலை 4 மணியளவில் சந்தோஷி தனது பிள்ளைகளை வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, இவர்கள் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நிலையில், தாய் வாகனத்தை இயக்கி இருக்கிறார். தாய்க்கு பின்னால் குழந்தைகள் இருக்கின்றனர். Sexual Complaint Against Director Ranjith: ஹேமா கமிட்டி அறிக்கை; இயக்குநர் ரஞ்சித் மீது ஆண் நடிகர் பாலியல் புகார்..!

10 வயது சிறுமி பரிதாப பலி:

இதனிடையே, இவர்களின் இருசக்கர வாகனம் அருகிலேயே லாரி ஒன்று வந்துகொண்டு இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக மூவரும் நிலைதடுமாறி விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் குழந்தை காமேஸ்வரி மீது லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கி இருக்கிறது. இதனால் காமேஸ்வரி நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காயமடைந்த தாய்-மகனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் மியா ராம் ஜாத் என்பவரை கைது செய்தனர்.

இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளான பதைபதைப்பு காணொளி:

(The above story first appeared on LatestLY on Aug 31, 2024 12:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).