Geyser Explodes: திருமணமான 5 நாட்களில் புதுமணப்பெண்ணுக்கு இப்படியா நடக்கணும்? பாத்ரூமில் பரிதாபமாக பறிபோன உயிர்.!

திருமணம் முடிந்த சில நாட்களில், வாட்டர் ஹீட்டர் அமைப்பு வெடித்துச் சிதறி இளம்பெண் உயிரிழந்த சோகம் புதுமாப்பிள்ளைக்கு அதிர்ச்சி தந்துள்ளது.

Geyser Explodes: திருமணமான 5 நாட்களில் புதுமணப்பெண்ணுக்கு இப்படியா நடக்கணும்? பாத்ரூமில் பரிதாபமாக பறிபோன உயிர்.!
Bathroom Marriage Both File Pic (Photo Credit: Pixabay)

நவம்பர் 30, பரேலி (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டம், மிர்கன்ச், பிபல்சனா சௌதாரி கிராமத்தில் வசித்து வரும் நபர் தீபக் யாதவ். இவருக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. தம்பதிகளுக்கு கடந்த 5 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், பெண் தனது மாமியார் வீட்டில் இருந்து வருகிறார். வானிலை: கொட்டித்தீர்க்கபோகும் பேய் மழை.. இன்றும், நாளையும் ரெட் அலர்ட்.. இன்றைய, நாளைய வானிலை அறிவிப்பு இதோ.! 

வாட்டர் ஹீட்டர் வெடித்து பெண் பலி:

இதனிடையே, நேற்று அவர் குளிக்கச் சென்ற நிலையில், வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தியதாக தெரியவருகிறது. குளிக்கச் சென்ற பெண்மணி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராத நிலையில், குடும்பத்தினர் பலமுறை அவரை அழைத்தும் பலனில்லை. இதனால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, பெண் மயங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். மேலும், வாட்டர் ஹீட்டர் அமைப்பு வெடித்ததற்கான அடையாளத்துடன் காணப்பட்டுள்ளது.

காவல்துறையினர் விசாரணை:

உடனடியாக பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாட்டர் ஹீட்டர்களை அவ்வப்போது பராமரித்து பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்குகின்றனர். பிரேத பரிசோதனை முடிவைப்பொறுத்தே, மேற்படி விசாரணை நடக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விஷயம் புதுமணப்பெண், அவரது கணவர் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 30, 2024 03:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).