Suicide file pic (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 17, பிரயாக்ராஜ் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டம், ஷாஹ்கன்ச் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பெண்மணி, அம்மாநில காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவரின் சொந்த ஊர் கான்பூர் ஆகும். தற்போது ப்ரயக்ராஜ் மாவட்டத்தில் உள்ள ஷாஹ்கன்ச் பகுதியில் இருக்கும் சுற்றுலாத்தலத்தில் காவலராக பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரைப்போல, அம்மாநில காவல்துறையில் பணியாற்றி வருபவர் ராஜேஷ் (வயது 32). இவர் மதுரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். சம்பவத்தன்று 30 வயதுடைய பெண் காவல் அதிகாரி தங்கியிருந்த வீட்டில் நடமாட்டம் இல்லை. அக்கம் பக்கத்தினர் சந்தேகித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். Hug Benefits: கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்; ஆய்வில் ருசிகர தகவல்.. எல்லாரும் கட்டிப்பிடி வைத்தியம் பண்ணுங்க.! 

அச்சமயம் வீட்டின் படுக்கை அறையில் 30 வயதுடைய பெண் காவலர் சடலமாகவும், மற்றொரு அறையில் தூக்கில் தொங்கியவாறு ராஜேஷின் சடலமும் மீட்கப்பட்டது. இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காவலர்கள் இருவரும் நண்பர்கள் என்பது தெரியவந்தது. 30 வயதுடைய பெண் காவலரின் நெருங்கிய தோழியை ராஜேஷ் திருமணம் செய்துள்ளார். இதனால் இருவரின் மரணத்திற்கான காரணத்தில் சந்தேகம் நிலவுகிறது. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலாத்தலத்தில் தனியாக பணியில் நியமனம் செய்யப்பட்ட பெண் காவலர், தனது வசதிக்காக தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்துள்ளார்.

சடலம் மீட்கப்பட்ட வீட்டில் இருந்து கடிதம் எதுவும் கைப்பற்றப்படாததால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.