ஜூன் 25, தெஹ்ரி (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தெஹ்ரி மாவட்டம், ஜகானிதர், பாலிகா ஆபிஸ் சாலை பகுதியில் நேற்று கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு இயங்கியது. இந்த கார் சாலையோரம் பயணம் செய்த 3 பெண்கள் உட்பட ஐவரின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சாலையோரம் நடந்து வந்தவர்கள் கால்வாய்க்குள் தூக்கி வீசப்பட்டனர். காரும் சாலையோரம் மோதி நின்றது. விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Woman Caught While Using Drugs: கழிவறைக்குள் சென்று போதைப்பொருளை உட்கொண்ட இளம்பெண்கள்; அதிர்ச்சி காட்சிகள்.!
3 பேர் அடுத்தடுத்து பலி:
நிகழ்விடத்திற்கு விரைந்த அவசர ஊர்தி மருத்துவ குழுவினர், விபத்தில் சிக்கியவர்களில் 35 வயதுடைய பெண்ணின் மரணத்தை உறுதி செய்தனர். மேலும், உயிருக்கு போராடிய சிறுமிகள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு சிறுமிகளின் மரணமும் அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டது. தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர்.
பதைபதைப்பு வீடியோ:
விசாரணையில், விபத்தில் பலியானது ரேனா நேகி (வயது 36), அக்ரிமா நேகி (வயது 10), அன்விதா (வயது 7) என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் மீது கரை மோதி விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விபத்தின் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மருத்துவமனையில் இருவர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்திற்கு உள்ளகிப்போயினர்.
तेज रफ्तार कार ने टहल रही महिला और 2 बच्चियों को रौंदा.
तीनों की मौत हुई. उत्तराखण्ड के नई टिहरी का मामला. pic.twitter.com/B8rrnfaKIh
— Priya singh () June 25, 2024