Uttar Pradesh Wife Threatened Husband (Photo Credit : @aajtak X)

ஜூன் 27, உத்திரபிரதேசம் (Uttar Pradesh News): மேகாலயாவில் தேனிலவுக்கு சென்ற மத்தியப்பிரதேச தொழிலதிபர் ராஜா ரகுவின்ஷி, தனது மனைவி சோனம் என்பவரால் கூலிப்படை ஏவி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் இடையூறாக இருந்ததால் கொலை நடந்தது தெரியவந்தது. இந்த கொலையை தொடர்ந்து ஜார்க்கண்ட், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் கள்ளக்காதல் கொலைகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன. இதன் காரணமாக கள்ளக்காதல் வயப்பட்ட மனைவிகளை, கணவர்கள் அவரின் காதலர்களுக்கே திருமணம் செய்து வைத்த சம்பவங்களும் ஆந்திரா, உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்தன.

கத்தியை காட்டி கணவனை மிரட்டிய மனைவி :

இதனிடையே திருமணம் முடித்து முதலிரவு அறைக்குள் வந்த கணவரிடம், "என் மீது கை வைத்தால் நீ 35 பீசாகி விடுவாய். நான் அமன் என்பவருக்கு மட்டுமே சொந்தம்" எனக்கூறி கத்தியை காட்டி மனைவி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் வசித்து இருப்பவர் நிஷாத். இவருக்கும், சித்தாரா என்ற பெண்மணிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், என் மீது கை வைத்தால் நீ 35 பீஸ் ஆகிவிடுவாய், நான் அமனுக்கு சொந்தமானவள்" என்று கத்தியை வைத்து மனைவி மிரட்டி இருக்கிறார்.

குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி :

இதனால் அன்றைய நாளில் இரவு முழுவதும் சித்தாரா கத்தியுடன் படுக்கையில் மிரட்டலுடன் இருந்த நிலையில், உயிருக்கு பயந்து தூங்காது நிஷாத் இருந்துள்ளார். இதே சம்பவம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடக்கவே, இந்த விஷயத்தை அவர் குடும்பத்தினரிடம் ஒரு கட்டத்தில் தெரிவித்துள்ளார். அவர்கள் பெண்ணிடம் விசாரித்த போது பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ள நிலையில், என்ன செய்வது? என தெரியாமல் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கணவர் அளித்த வாக்குமூலம் :