Gold Rate Rises In India: ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?!
இப்பதிவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
ஜூலை 17, சென்னை (Chennai): இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. இந்நிலையில் ஜூலை 16ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. Aadi Memes: தொடங்கியது ஆடி மாதம்.. சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் கலக்கல் மீம்ஸ்.! கூழ் முதல் குமுறல் வரை..!
இன்றைய தங்கம் - வெள்ளி (Gold Silver Price Today) விலை நிலவரம்: இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை என்பது ரூ.55,000 ஐ தாண்டி இருக்கிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது, நேற்றைய விலையில் இருந்து சவரனுக்கு ரூ.720 அதிகரித்து இருக்கிறது. இதனால் இன்று தங்கத்தின் ஆபரண தங்கத்தின் விலை ரூ.55,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கிராம் தங்கத்தின் விலையும் இன்று ரூ.90 உயர்ந்து, ரூ.6,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.100.50 க்கும், கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,500 க்கும் விற்பனை செய்யப்டுகிறது. நேற்றைய விலையில் இருந்து வெள்ளி ரூ.1 அளவு உயர்ந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 17, 2024 11:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

