12-Year-Old Girl Sexually Assaulted: வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்; மருத்துவ சோதனையில் அதிர்ந்துபோன பெற்றோர்.!

பெற்றோர் வேலைக்கு சென்றபின்னர், வீட்டில் தனியே இருக்கும் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த கயவனின் செயல் அதிர்ச்சியை தந்துள்ளது.

12-Year-Old Girl Sexually Assaulted: வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்; மருத்துவ சோதனையில் அதிர்ந்துபோன பெற்றோர்.!
Rape File pic (Photo Credit: Pixabay)

ஜூலை 31, தானே (Maharashtra News): மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தானே (12-Year-Old Girl Rape in Mumbai), பட்லாபூர் பகுதியில் வீட்டு கட்டுமான வேலை செய்யும் கூலித்தொழிலாளி தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 12 வயதுடைய மகள் இருக்கிறார். தம்பதிகளின் பூர்வீகம் நேபாளம் ஆகும். பல ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்த தம்பதிகள், பின்னாளில் தங்களுக்கு கிடைத்த வேலைகளை செய்து பிழைத்து வந்துள்ளனர்.

12 வயது சிறுமி பலாத்காரம்:

இதனிடயே, தம்பதிகளின் 12 வயது மகள் தனக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாக கூறி இருக்கிறார். இதனால் சிறுமியின் பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்துசென்ற நிலையில், அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதும் அம்பலமானது. Wayanad Landslides: வயநாடு நிலச்சரிவில் சிக்கி 126 பேர் பலி., 89 பேர் மாயம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் துயரம்:

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் படலாபூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கட்டுமான வேலை செய்துவரும் தம்பதி, நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட தங்கும் இடத்தில் குடும்பத்துடன் இருக்கின்றனர். கடந்த ஜூன் மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, மர்ம நபர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார்.

காவல் துறையினர் விசாரணை:

பின் அவர் அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில், மீண்டும் அவ்வாறான துயரத்தை எதிர்கொண்டு இருக்கிறார். இதனால் அவர் வயிற்றுவலி பொறுக்க இயலாமல் துடித்தது தெரியவந்தது. இதனையடுத்து, காவல் துறையினர் மர்ம நபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 31, 2024 10:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).