25 Tigers Missing: 25 புலிகள் மாயம்.. தேசிய பூங்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

ரந்தம்பூர் தேசிய பூங்காவில் இருந்த 25 புலிகள் காணாமல் போயுள்ளதாக, தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.

25 Tigers Missing: 25 புலிகள் மாயம்.. தேசிய பூங்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

நவம்பர் 06, ரந்தம்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரில் அமைந்துள்ள, ரந்தம்பூர் தேசிய சரணாலயத்தில் (Ranthambore Tiger Reserve) இருந்து கடந்த சில ஆண்டுகளாகவே புலிகள் மாயமாகி வருகின்றன. இந்நிலையில் கடந்தாண்டில் மட்டும் 25 புலிகள் காணாமல் போய் உள்ளதாக தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் உபாத்யாய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த 3 பேர்கொண்ட விசாரணைக் குழு ஒன்றையும் அமைத்துள்ளார். இந்த குழு இரண்டு மாதங்களில் தனது அறிக்கையை சமர்பிக்கும். PM Modi Wish on Donald Trump: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப்; நண்பருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!

சரணாலயத்தில் இருந்த 75 புலிகளில் மூன்றில் ஒரு பங்கு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கடந்த 2022ஆம் ஆண்டு இதே பூங்காவில் 13 புலிகள் காணாமல் போனதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ஒரே வருடத்தில் 25 புலிகள் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 06, 2024 06:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).