Pahalgam Terrorist Attack: பயங்கரவாத தாக்குதலின் நெஞ்சை பதறவைக்கும் காணொளி.. பொறுப்பேற்ற அமைப்பு..! பலி எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.!
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு லஸ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. இந்த சம்பவத்தால் தேசிய அளவில் பரபரப்பு சூழல் உண்டாகியுள்ளது.
ஏப்ரல் 22, பஹல்கம் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்கம் (Pahalgam Terror Attack Today) பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 2 இத்தாலி, இஸ்ரேல் நாட்டவர்கள் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலும் ஆண்களை தேடித்தேடி கொலை செய்த பயங்கரவாத கும்பல், கொலை செய்யப்படும் முன்பு அவர்களின் மதம் தொடர்பாக கேட்டுவிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கொலை செய்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பல விடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி பதறவைக்கும் வண்ணம் இருக்கின்றன. Earth Day 2025: பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள்: உலக பூமி தினம் 2025 இன்று..!
லஸ்கர் துணை அமைப்பு பொறுப்பு:
இதனிடையே, இன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் லஸ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது. தாக்குதல் சம்பவத்தைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் நேரடியாக ஸ்ரீநகர் விரைந்துள்ள நிலையில், பதில் தாக்குதல் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தால் தேசிய அளவிலும் பதற்றம் உண்டாகி இருக்கிறது. அமெரிக்க துணை அதிபர் இந்தியாவில் இருக்கும் நேரத்தில் காஷ்மீரில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பெண் தனது கணவருக்கு உதவி செய்யுமாறு கலங்கிய காணொளி:
Pahalgam attack: 12 tourists injured. 1 dead. Casualties likely to rise.
Eyewitness says terrorist checked religion (Non-Muslim) before shooting.
PM calls HM Amit Shah and asks him to take immediate measures including visit to site. Urgent meeting called at HM residence pic.twitter.com/lITGOfhs2A
— Megh Updates 🚨™ (@MeghUpdates) April 22, 2025
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

