MLA Munirathna Case: பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்கு.. பெண் பரபரப்பு புகார்..!

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா உட்பட 7 பேர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

MLA Munirathna Case: பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்கு.. பெண் பரபரப்பு புகார்..!
BJP MLA Munirathna (Photo Credit: @EnigmaticReddy X)

செப்டம்பர் 19, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வன்கொடுமை (Sexual Assault) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. எம்.எல்.ஏ முனிரத்னா (BJP MLA Munirathna), ஏற்கனவே ஒப்பந்ததாரரை சாதி ரீதியாக பேசி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். Wrestler Vinesh Phogat Turned Politician: காங்கிரஸில் இணைந்த ஒலிம்பிக் நாயகி வினேஷ் போகத்.. அரசியலில் ஜொலிப்பாரா..?

இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர், இவர் மீது ராமநகரா (Ramanagara) மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், எம்.எல்.ஏ முனிரத்னா உள்பட 7 பேர் மீது ராமநகரா மாவட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த பெண் அளித்த புகாரில், கக்களிபுரா பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on Sep 19, 2024 11:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).