Kolar Shocker: வேறுஜாதி இளைஞருடன் காதல்; மகளை கொலை செய்த தந்தை.. காதலியின் நினைவில் தற்கொலை செய்த காதலன்.. நெஞ்சை உலுக்கும் சோகம்.!
ஜாதி கடந்து மனம் கவர்ந்த இளைஞரை கரம்பிடிக்கும் முடிவில் உறுதியாக இருந்த மகளை தந்தை கொலை செய்திட, தன் காதலி மீது வைத்த அன்பால் காதலி சென்ற இடத்திற்கே காதலனும் இறுதி பயணம் மேற்கொண்டார்.
ஜூன் 29, பெங்களூர் (Karnataka News): தன் அன்பின் மறுஉருவமாக இருந்த காதலி கொலை செய்யப்பட்ட தகவலை அறிந்த காதலன், காதலியை தேடி அவருடன் பயணிக்க தனது உயிரை மாய்துகொண்ட சோகம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் (Kolar KGF), பங்காருபேட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் மகள் கீர்த்தி (வயது 20).
கீர்த்திக்கும் - அப்பகுதியை சேர்ந்த கங்காதர் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதல் விவகாரம் கீர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு தெரியவந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், காதலுக்கு கிருஷ்ணமூர்த்தி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Online Rummy Suicide: ஆன்லைன் ரம்மியில் ரூ.25 இலட்சம் இழந்த இளம் வங்கி பணியாளர் தற்கொலை; சங்கரன்கோவிலில் சோகம்.!
மகள் தனது முடிவில் உறுதியாக இருப்பதை அறிந்துகொண்ட கிருஷ்ணமூர்த்தி, பெற்றெடுத்த மகள் என்றும் பாராது அவரை கொலை செய்துள்ளார். பின் காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முதல் தகவலையும் பிதற்றி கூறி இருக்கிறார்.
விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானதை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். காதலி காதல் விவகாரத்தில் தந்தையால் கொலை செய்யப்பட்டதை அறிந்த கங்காதரும் தற்கொலை செய்துகொண்டு தனது உயிரை மாய்த்தார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் விசாரணைக்கு பின்னர் கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக இந்திய அரசியலமைப்பு சட்டம் 302-வது பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.
(The above story first appeared on LatestLY on Jun 29, 2023 09:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

