Someshwara Beach: கடற்கரையில் கல்லூரி தோழிகளுடன் இருந்த 3 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்; 6 பேர் கும்பல் வெறிச்செயல்.!

பொதுஇடங்களில் தோழிகளுடன் பயணம் செய்யும் நபர்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடந்தும் சம்பவங்கள் இந்திய அளவில் அதிகரித்து இருக்கின்றன.

Someshwara Beach: கடற்கரையில் கல்லூரி தோழிகளுடன் இருந்த 3 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்; 6 பேர் கும்பல் வெறிச்செயல்.!
Visuals from Spot (Photo Credit: ANI)

ஜூன் 02, மங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் மாவட்டம், சோமேஸ்வரா கடற்கரையில் நேற்று 3 கல்லூரி மாணவர்கள், தங்களின் கல்லூரி தோழிகளுடன் இருந்தனர்.

அப்போது, அவர்களை கவனித்த 6 பேர் கொண்ட கும்பல், மாணவர்களின் விபரங்கள் குறித்து கேட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் பதறிப்போன கல்லூரி மாணவிகள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். Coimbatore Accident: ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்து பயங்கர விபத்து; 3 தொழிலாளர்கள் மரணம்..!

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்ததை அடுத்து, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. காயமடைந்து இருந்த கல்லூரி மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சோமேஸ்வரா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் மீது தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jun 02, 2023 10:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).