![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/04/Kannada-Actor-Kichcha-Sudeepa-Bangalore-Press-meet-Photo-Credit-ANI-380x214.jpg)
ஏப்ரல் 05, பெங்களூர் (Karantaka News): கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான (Karnataka Assembly Election 2023) தேர்தல் மே மாதம் 10 ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகிறது. ஆளும் பாஜக மீண்டும் தனது ஆட்சியை நிலைநிறுத்த தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தை பொறுத்தமட்டில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான பாஜக, ஆட்சியை பாஜகவிடம் இழந்த குமாரசாமியின் ஜனதா தளம் எஸ் ஆகிய 3 கட்சிகள் பிரதானமாக கருதப்படுகின்றன. இதனால் அங்கு மும்முனை போட்டிகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Jr NTR Hritick Roshan: வார் 2 திரைப்படத்தில் பாலிவுட் – டோலிவுட் உச்ச நட்சத்திரங்கள் இணைவு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஆளும் பாஜகவை பொறுத்தமட்டில் அக்கட்சியின் முக்கிய அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது பொதுவெளியில் கவனிக்கத்தக்க அளவு புகார்கள் குவிந்து, அவை செய்தியாக வெளியாகி இருக்கின்றன. இதற்கிடையில், நிலைமை எப்படி இருப்பினும், அதனை எதிர்கொண்டு தேர்தலில் களமிறங்கிய வேண்டிய கட்டாயத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இதற்காக நட்சத்திர பேச்சாளர்களையும் கர்நாடக மாநில பாஜக ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில், பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் கிச்சா சுதீப் (Kichcha Sudeepa) முடிவெடுத்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் உறுதியும் செய்துள்ளார்.
I will only campaign for the BJP, not contest the elections: Kannada actor Kichcha Sudeepa, in Bengaluru pic.twitter.com/tw5oewOAXd
— ANI (@ANI) April 5, 2023