MP Shocker: கற்பழிப்பு புகார் அளித்த பெண்ணை ஜாமின் பெற்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி; அதிரவைக்கும் பகீர் சம்பவம்.!
தனக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண்ணை, 2 ஆண்டுகள் கழித்து குற்றவாளி ஜாமின் பெற்று மீண்டும் பலாத்காரம் செய்த கொடூரம் மத்திய பிரதேசத்தை அதிரவைத்துள்ளது.
ஆகஸ்ட் 27, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் (Bhopal) பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, இளம்பெண் வெளியே சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வரும்போது 2 பேர் கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி கற்பழிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில், உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பலனில்லை. அதிகாரிகள் அலைக்கழிக்க விட்ட நிலையில், பெண்மணி உயர் அதிகாரிகளின் அலுவலகத்திற்கு பலமுறை அலைந்து புகார் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு (Bhopal Man Raped Survivor after 2 Years) அபிஷேக் சிங் என்ற லக்கி என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரின் மீது பெண் புகார் அளித்ததை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். Ajith Cycling With Children: குழந்தைகளோடு மகிழ்ச்சியாக சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த தல அஜித் – ஷாலினி வெளியிட்ட அசத்தல் வீடியோ வைரல்.. லிங்க் உள்ளே..!
இந்நிலையில், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த அபிஷேக் சிங், பெண்ணை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு, தனது நண்பர் ஒருவருடன் பெண்ணை கடத்தி இரண்டு பேராக கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். புகாரை ஏற்ற அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களில் அபிஷேக் ஏற்கனவே பலாத்கார வழக்கில் சிறைக்கு சென்று, மீண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணையே கடத்தி கற்பழித்து இருப்பது அப்பகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)