நவம்பர் 23, லூசியானா (World News): அமெரிக்காவில் உள்ள லூசியானா மாகாணத்தை சேர்ந்தவர் லீன் எம்மாரினோ (வயது 45). இவர் லூசியானாவின் ப்ரைரிவில்லே பகுதியில் வசித்து வருகிறார். இதனிடையே பெண்மணி தனது 14 வயதுடைய மகளின் பள்ளி தோழர்களுடன் பாலியல் உறவில் இருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும் தனது நிர்வாண படங்களை 14 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 5 சிறுவர்களுக்கு அனுப்பி அவர்களை தன் வசப்படுத்தி தனிமையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. Bangladesh Earthquake: வங்கதேச நிலநடுக்கத்தால் 6 பேர் மரணம்.. கொல்கத்தா, அசாமிலும் நில அதிர்வு.!
ஸ்னாப்சாட் மூலம் பழக்கம்:
அதனை தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஸ்னாப்சாட் ஆப் மூலம் சிறுவர்களுக்கு பெண் தனது நிர்வாண படங்களை அனுப்பியதும் தெரிய வந்தது. இதனை எடுத்து பெண்ணுக்கு எதிரான ஆவணங்களை சேகரித்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வந்த நிலையில், தற்போது பெண்ணுக்கு சுமார் 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் லீனின் மகளே தனது தாய்க்கு எதிராக வாதங்களை முன்வைத்தது இந்த வழக்கில் உடனடி தீர்வு கிடைக்கவும் வழிவகை செய்துள்ளது.