Stunt Biker Arrested: நடுரோட்டில் 2 பெண்களுடன் சாகசம் செய்த இளைஞர்; வீடியோ சிக்கியதால் அதிரடி கைது.!
காதல் மலையையும் வில்லாக வளைக்கும் திறன் கொண்டது என கூறுவார்கள். அதே காதல் பல கிறுக்குத்தனத்தையும் செய்ய வைக்கிறது. இந்த கிறுக்குத்தனங்கள் சில நேரங்களில் சட்டத்திற்கு எதிராக இருப்பதால், அது சார்ந்த பிரச்சனையையும் சந்திக்க வேண்டியுள்ளது.
ஏப்ரல் 03, மும்பை (Maharashtra News): இளம் வயதுள்ளவர்கள் ஊருக்கு பயந்து காதல் செய்த காலமெல்லாம் மலையேறி, தற்போது காதலியை மகிழ்விக்கிறேன் அல்லது தோழியை மகிழ்விக்கிறேன் என்ற பெயரில், சட்டவிதிமுறைகளை கடைபிடிக்காமல் தங்களுக்கு தோன்றும் வகையில், சிந்தையில் உதிக்கும் விஷயங்களை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலையில் பயணம் செய்த இருசக்கர வாகன ஓட்டி, தனது வாகனத்தின் முன்புறம் ஒரு பெண்ணும், பின்புறம் ஒரு பெண்ணும் (2 Girl Ride With Biker Atrocit Video Goes Viral) என இரண்டு பெண்கள் அவரை இரு திசையிலும் கட்டிப்பிடிக்க, சாகசம் செய்தவாறு இளைஞர் பயணித்த வீடியோ வெளியாகி வைரலாகியது. Amyra Dastur Hot: நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல்; டூ-பீஸுடன் அல்டிமேட் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கிளுகிளுப்பாக்கிய நடிகை.!
MI 01 DH 5987 பதிவெண் கொண்ட இருசக்கர வாகன இளைஞர் இவ்வாறான செயலை செய்ய, அவரின் வாகன பதிவெண் கொண்டு அவருக்கு அதிகாரிகள் வலைவீசினர். இதனையடுத்து, மும்பை காவல் துறையினர் நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், குற்றப்பின்னணி கொண்ட இளைஞரான பயாஸ் அகமத் அஜீமுல்லா காட்ரி (வயது 24) என்பவரின் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன. இவர் காவல் துறையினரின் பிடியில் இருந்து தப்பிக்க, அவ்வப்போது தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு இருந்துள்ளார்.
இதற்கிடையில் தான் காதல் வலையில் வீழ்த்திய 2 இளம்பெண்களுடன் அகமத் தனது சாகச வித்தைகளை தேசிய நெடுஞ்சாலையில் காண்பித்தபோது வீடியோ வைரலாகி சிக்கிக்கொண்டார் என்ற தகவல் அம்பலமானது. விசாரணைக்கு பின்னர் இளைஞர் பயாஸ் அகமத் அஜீமுல்லா சிறையில் அடைக்கப்பட்டார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)