Solar Explosive Blast: சோலார் வெடிமருந்து நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து: 9 பேர் பரிதாப பலி.!

வெடிபொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, வெடிபொருட்கள் வெடித்து சிதறியதால் 9 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

Fire Explosion (Photo Credit: Pixabay)

டிசம்பர் 17, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, நாக்பூர், பஜார்கோன் பகுதியில் சோலார் வெடிபொருட்கள் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. Trending Video: ஒன்றில் தொடங்கி 9ல் முடிந்த மெகந்தி: அசரவைக்கும் மெகந்தி கலைஞரின் சிந்தனைத்திறன்: வைரல் வீடியோ இதோ.! 

வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.