Maharashtra College Girl Killed: வேறுஜாதி இளைஞரை காதலித்து, திருமணத்தை நிறுத்திய மகள்.. கொன்று உடலை எரித்து சாம்பலை கரைத்த பெற்றோர்.. தந்தை, தாய்மாமா உட்பட 5 பேர் கைது.!

தனது மகள் ஊரார் முன்பு திருமணத்தை நிறுத்தி காதல் குறித்து தெரிவித்துவிட்டால் என ஆதங்கப்பட்டு பெற்றோர், அவரை கொலை செய்து சாம்பல் கூட எஞ்சாத அளவு செய்த கொலை இந்தியாவையே அதிரவைத்துள்ளது.

Maharashtra College Girl Killed: வேறுஜாதி இளைஞரை காதலித்து, திருமணத்தை நிறுத்திய மகள்.. கொன்று உடலை எரித்து சாம்பலை கரைத்த பெற்றோர்.. தந்தை, தாய்மாமா உட்பட 5 பேர் கைது.!
Honour Killing GIrl Student & Arrested Victims

ஜனவரி 28: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நான்தேட் மாவட்டம் (Nanded District), மஹிபால் கிராமத்தில் (Mahipal Area) வசித்து வரும் மருத்துவக்கல்லூரி மாணவி சுபாங்கி (Shubhangi Jogdand). இவர் தனது கிராமத்தில் வசித்து வந்த இளைஞர் தருண் என்பவரோடு பழகி வந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக (Love) மாறியதை தொடர்ந்து, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதல் விவகாரம் சுபாங்கியின் பெற்றோருக்கு (Parents) தெரியவரவே, தருணின் சமூகத்தை மேற்கோளிட்டு பேசியவர்கள் காதலை கைவிடக்கூறி கோரிக்கை வைத்துள்ளனர். பெற்றோரின் அறிவுரை மற்றும் கண்டிப்புகளை ஏற்றுக்கொள்ளாத சுபாங்கி, தருணுடன் கொண்ட காதலை தொடர்ந்து வந்துள்ளார்.

இதற்கிடையில், சுபாங்கிக்கு வேறொரு இளைஞரை பார்த்து திருமணம் (Marriage) செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்ய, திருமணத்தின் போது மணமகன் மற்றும் ஊரார் முன்பு தனது காதலை தெரிவித்த சுபாங்கி, திருமணத்தையே நிறுத்தி இருக்கிறார். ஊர் மக்கள் முன்பு மகளால் அவமானப்பட்டுவிட்டீர்கள் என்று பெற்றோரை சுபாங்கியின் தாய்மாமா தரப்பு ஏத்திவிட்டுள்ளது. BJP H Raja about EVKS Elangovan: “துடைப்பத்தால் அடிவாங்கியவருக்கு யார் ஒட்டு போடுவார்கள்?” – ஈரோடு இடைத்தேர்தலில் இவருக்குத்தான் வெற்றி: எச்.ராஜா பேச்சு.! 

இதனால் பெற்றோர் மகளை வீட்டில் வைத்து கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்துவிடவே, சுபாங்கியின் இறப்பை மறைக்க நினைத்த பெற்றோர் சடலத்துக்கு தீ வைத்து எரித்து சாம்பலை ஆற்றில் வீசியுள்ளனர். பின்னர், எதுவும் தெரியாதது போல செயல்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சுபாங்கி மாயமானது தொடர்பான தகவலை அறிந்த ஊர்மக்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாகவே சுபாங்கியின் தந்தை, தாய்மாமா உட்பட 5 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 28, 2023 12:40 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(The above story first appeared on LatestLY on Jan 28, 2023 12:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).