Nashik Accident: சொகுசு பேருந்து - கனரக லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 7 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாப பலி.!

தனியார் சொகுசு பேருந்தும் - லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் பலியான சோகம் நெஞ்சை பதறவைத்துள்ளது. விபத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Nashik Accident: சொகுசு பேருந்து - கனரக லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 7 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாப பலி.!
Visual: Nashik Bus - Lorry Accident

ஜனவரி 13, நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடியில் இருந்து அம்பேர்நாத் (Shirdi to Ambernath ) பகுதிக்கு இன்று தனியார் சொகுசு பேருந்து சென்றுகொண்டு இருந்தது. இந்த பேருந்தில் 45 பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில், பேருந்து நாசிக் வாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் பதரே கிராமம் அருகில் லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தங்களின் உயிரை காப்பாற்றக்கூறி அலறியுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த வாவி காவல் துறையினர், படுகாயமடைந்த 17 பயணிகளை மீட்டனர். Nigeria Hackers: சொசைட்டி பேங்கில் கைவரிசை காட்டிய ஹேக்கர்கள்.. டெல்லிக்கு சென்று குற்றவாளிகளை தட்டிதூக்கிய தமிழ்நாடு போலீஸ்.! 

இவர்கள் சின்னார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். விபத்தில் 7 பெண்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர்.

அவர்களின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 13, 2023 11:20 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(The above story first appeared on LatestLY on Jan 13, 2023 11:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).