Mumbai Man Killed: பழிக்குப்பழியாக பயங்கர சம்பவம்.. 25 ஆண்டுகள் கழித்து பாடி பில்டரை கூலிப்படை ஏவி கொன்ற கொடூரம்.!
25 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்க குடும்பத்தினர் பாடி பில்டரை கூலிப்படை வைத்து போட்டுத்தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.
மார்ச் 20, நவி மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் உள்ள நவிமும்பை (Navi Mumbai), நெருல் பகுதியில் கடந்த 15ம் தேதி பாடி பில்டரான சாவ்ஜி மஞ்சூரி படேல் என்பவர் சுட்டு கொல்லப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கொலையை அரங்கேற்றிவிட்டு தப்பி சென்றனர். இந்த விஷயம் தொடர்பாக நவி மும்பை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அங்கிருந்த கண்காணிப்பு கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டு குற்றவாளிகளின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதன்பேரில் மெஹக் ஜெயராம் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர் ஆவார். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கையில் பல பரபரப்பு தகவல் அம்பலமாகின. Shocking Video: கெமிக்களில் சேர்த்ததும் புதிதாக அறுவடை செய்யப்பட்டதை போல உயிர்த்தெழுந்த கீரை.. பகீர் வீடியோ வைரல்.!
கடந்த 1998ம் ஆண்டு பாகுபாய் பாடினி என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பாடி பில்டர் சாவ்ஜி படேல் கைது செய்யப்பட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய படேலை பழிவாங்கிட வேண்டும் என மறைந்த பாகுபாய் குடும்பத்தினர் காத்துகொண்டு இருந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இருதரப்பு குடும்பத்தினர் இடையே தகராறு நடைபெற்ற நிலையில், இதுவே சமயம் என சிந்தித்த பாகுபாய் குடும்பத்தினர், மெஹக்கிடம் கலந்து பேசி, அவரின் மூலமாக மும்பை பாந்த்ரா பகுதியை சேர்ந்த கூலிப்படைக்கு ரூ.25 இலட்சம் பணம் கொடுத்து கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, கொலை தொடர்பான விவகாரத்தில் காவல் துறையினர் பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 பேர், மெஹக் உட்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
(The above story first appeared on LatestLY on Mar 21, 2023 06:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

