Pune Chain Snatching: மூதாட்டியின் செயினை பறிக்க முயற்சித்த இளைஞர்.. கைப்பையை வைத்து சம்பவம் செய்த பேத்தி.!

இருசக்கர வாகனங்களில் வந்து சற்றும் எதிர்பாராமல் நடக்கும் செயின் பறிப்பு சம்பவத்தில், பேத்தியின் சுதாரிப்பால் மூதாட்டி லேசான காயத்துடன் தப்பிய சம்பவம் நடந்துள்ளது.

Pune Chain Snatching: மூதாட்டியின் செயினை பறிக்க முயற்சித்த இளைஞர்.. கைப்பையை வைத்து சம்பவம் செய்த பேத்தி.!
Pune Attempt of Chain Snatching Visuals | CCTV Footage (Photo Credit: Twitter)

மார்ச் 10, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே (Pune, Maharashtra), மாடல் காலனி பகுதியை சேர்ந்த பெண்மணி லதா காஜி (வயது 60). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி தனது பேத்தி ப்ருத்வி காஜியுடன் நடந்து சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், மூதாட்டியிடம் முகவரி குறித்து விசாரிக்க முயற்சித்துள்ளார். அச்சமயம் சற்றும் எதிர்பாராத நேரத்தில் மூதாட்டியின் சங்கிலியை (China Snatching) பறிக்க முயற்சி நடந்துள்ளது.

இதனால் பதறிப்போன மூதாட்டியின் 10 வயது பேத்தி (Brave 10 aged Girl Prevent Grand Mother from Chain Snatching Youngster) பிருத்வி காஜி, தனது கைகளால் இருந்த கைப்பையால் இளைஞரை தாக்கியவாறு உதவிக்காக சத்தமிட்டுள்ளார். Karnataka Politics: விவசாயி மகனை திருமணம் செய்தால் பெண்களுக்கு ரூ.2 இலட்சம் நிதிஉதவி – அறிவிப்புகளால் களைகட்டும் கர்நாடக அரசியல்.! 

இதற்கிடையே அக்கம் பக்கத்தினர் ஒவ்வொருவராக வந்துவிட, இளைஞர் அங்கிருந்து வாகனத்தில் தப்பி சென்றார். இந்த சம்பவத்தில் மூதாட்டியின் சங்கிலியை இளைஞர் பிடித்து இழுத்தபோது, மூதாட்டியும் நகையை பிடித்துக்கொண்டதால் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

நகைகள் பறிபோகவில்லை என்றாலும், மூதாட்டி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று (CCTV Footage) சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Mar 10, 2023 11:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).