Minor Girl Raped: ஷீரடியில் சாமி தரிசனம் என 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த 46 வயது தந்தை.. நெஞ்சை பதறவைக்கும் கொடுமை.!

வளர்ப்பு தந்தையுடன் நம்பிக்கையாக அவரின் வார்த்தையை நம்பி ஷீரடி சாயிபாபா கோவிலுக்கு சென்ற சிறுமியை கயவன் பலாத்காரம் செய்த கொடூரம் நெஞ்சை பதறவைத்துள்ளது. தங்கும் விடுதியில் 11 வயது சிறுமியை சீரழித்த 46 வயது வளர்ப்பு தந்தையின் கொடூர செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு..

Minor Girl Raped: ஷீரடியில் சாமி தரிசனம் என 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த 46 வயது தந்தை.. நெஞ்சை பதறவைக்கும் கொடுமை.!
Rape Representational Image (Photo Credit: PTI)

மார்ச் 08, ஷீரடி (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, கண்டிவலி (Kandivili East, Mumbai) கிழக்கு பகுதியில் ஹரியானா மாநிலந்தை சேர்ந்தவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் அப்பகுதியில் முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக தெரியவருகிறது. அந்த பெண்மணி 11 வயது மகள் இருக்கிறார்..

இந்நிலையில், கடந்த மார்ச் 4ம் தேதி சிறுமிக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. முன்னதாக 3ம் தேதியே சிறுமியின் வளர்ப்பு தந்தை, மகளிடம் சீரடி சென்று சாயிபாபா (Shirdi Saibaba Temple) கோவிவிலில் சிறப்பு தரிசனம் செய்துவிட்டு வரலாம். அதுவே உனக்கு பிறந்தநாள் பரிசு என கூறி, அவரை தன்னுடன் சீரடி அழைத்து சென்றுள்ளார். Train Derail Video Viral: சரக்கு இரயில் தடம்புரண்டு விபத்து.. தண்டவாளத்தில் தடுமாறி பயணித்த பெட்டிகள்.. வீடியோ வைரல்.!

சாமி தரிசனம் செய்யப்போகிறோம் என்ற ஆவலில் இருந்த சிறுமியும் அவருடன் சென்றுள்ளார். சீரடியில் உள்ள விடுதியில் மார்ச் 4ம் தேதி நள்ளிரவில் அறையெடுத்த கொடூரன், அங்கு 11 வயது (Minor Girl Raped by Step Father In Shirdi Saibaba Temple Near Hotel) சிறுமியை பலாத்காரம் செய்து இருக்கிறான். இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.

பின்னர், மார்ச் 6ம் தேதி கண்டிவழிக்கு திரும்பி, சிறுமியின் அத்தை வீட்டில் அவரை ஒப்படைத்து எதுவும் தெரியாதது போல் இஇருந்துள்ளார். தனது வீட்டிற்கு அங்கிருந்த சென்ற சிறுமி, தாயிடம் நடந்ததை கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற சம்தா நகர் காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் 45 வயது வளர்ப்பு தந்தையை கைது செய்தனர்.

(The above story first appeared on LatestLY on Mar 08, 2023 06:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).