Actor Sreenath Bhasi's Driving License Suspended: மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமம் ரத்து..!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார்.

Actor Sreenath Bhasi's Driving License Suspended: மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமம் ரத்து..!
Actor Sreenath Bhasi (Photo Credit: @EnglishSalar X)

அக்டோபர் 16, திருவனந்தபுரம் (Kerala News): மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநாத் பாசி (Actor Sreenath Bhasi), கடந்த சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் பிரபல தாதா ஓம் பிரகாஷ் நடத்திய போதை பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 08-ஆம் தேதி ஸ்ரீநாத் பாசி, கொச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு வாலிபர் மீது மோதிவிட்டு (Road Accident), காரை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றதாக புகார் எழுந்தது. 5-Year-Old Girl Dies of Heart Attack: அதிர்ச்சி... சரிந்து விழுந்த 5 வயது சிறுமி.. மாரடைப்பால் பலியான சோகம்!

இதுகுறித்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் காரை ஓட்டியது ஸ்ரீநாத் பாசி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர் மீது கொச்சி போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமத்தை (Driving License) ஒரு மாதத்திற்கு ரத்து செய்து எர்ணாகுளம் ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார்.

(The above story first appeared on LatestLY on Oct 16, 2024 07:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).