Man Killed Live-In Partner: லிவ்-இன் காதலியை குக்கரால் அடித்துக் கொன்ற வாலிபர்- சந்தேகத்தால் கல்லூரி காதலிக்கு நடந்த பயங்கரம்.!

கேரளாவைச் சேர்ந்த வைஷ்ணவும்- தேவாவும் லிவ்-இன் முறையில் பெங்களூருவில் வசித்து வந்தனர். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வைஷ்ணவ் தேவாவை குக்கரால் அடித்து கொன்றுள்ளார்.

Man Killed Live-In Partner: லிவ்-இன் காதலியை  குக்கரால் அடித்துக் கொன்ற வாலிபர்- சந்தேகத்தால் கல்லூரி காதலிக்கு நடந்த பயங்கரம்.!
Live-In Couple Vaishnav-Deva (Photo Credit : Twitter)

August 28, பெங்களூரு (Bangalore News): கடந்த இரண்டு ஆண்டுகளாக கேரள (Kerala) மாநிலம் திருவனந்தபுரத்தை(Trivandrum) சேர்ந்த தேவா (எ)பத்மா தேவி என்ற 24 வயது பெண்ணும், அதே மாநிலத்தின் கொல்லம் (Kollam) பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவ் என்பவரும் லிவ்-இன் முறையில் பெங்களூருவில் (Bangalore) அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு தேவாவின் (Deva) நடவடிக்கைகளால் வைஷ்ணவுக்கு (Vaishnav) அவர் மீது சந்தேகம் ஏற்பட ஆரம்பித்தது. அதனால் இருவருக்கும் இடையே சண்டை ஆரம்பமானது. நேற்று அந்த சண்டை தொடர்ந்து அதிகரித்த நிலையில், ஆத்திரத்தில் வைஷ்ணவ் தேவாவை பிரஷர் குக்கரால் தாக்கி இருக்கிறார். இதனால் தேவா படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். 3 Black People Killed: இனவெறியால் மூவர் சுட்டு கொலை: அமெரிக்காவின் ஃப்ளாரிடா மாகாணத்தில் நடந்த பயங்கரம்.!

இவர்கள் இருவரும் ஒன்றாக கல்லூரியில் படித்தவர்கள் என்றும், மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிபவர்கள் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அவர்கள் இருவருக்கிடையிலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் நடந்த பிறகு வைஷ்ணவ் தப்பியோட முயற்சித்திருக்கிறார். அவரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்திருக்கின்றனர். காவல்துறை ஆணையர் சி.கே பாலா (C.K Bala) தலைமையில் வைஷ்ணவ் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

(The above story first appeared on LatestLY on Aug 28, 2023 06:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).