Mango Manorath: மாம்பழங்களால் ஜொலித்த முகேஷ் அம்பானி வீட்டு தெய்வங்கள்; அசத்தல் வீடியோ வைரல்.! காணக்கிடைக்காத காட்சி.!
முகேஷ் அம்பானி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் ஆன்டிலியா அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்தினரோடு வசித்து வருகிறார்.
ஜூன் 25, மும்பை (Mumbai News): உலக செல்வந்தர்களும் ஒருவரும், இந்திய செல்வந்தர்களின் முக்கியமானவருமாக இருப்பவர் முகேஷ் அம்பானி (Muhesh Ambani). இவரின் மனைவி நிதா அம்பானி. தம்பதிகளுக்கு இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற 3 குழந்தைகள் இருக்கின்றனர்.
முகேஷ் அம்பானி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரில் ஆன்டிலியா அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இவரின் வீட்டில் மிகப்பெரிய பூஜை அறையும் உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய அளவிலும் ,வெளிநாட்டிலும் ஏற்றுமதி, இறக்குமதி உட்பட பல தொழில்களை செய்து வருகிறது. சர்வதேச அளவில் மிகப்பெரிய ஒரேயொரு மாம்பழ ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ரிலையன்ஸ் ஆகும்.
இந்நிலையில், இன்று முகேஷ் அம்பானியின் இல்லத்தில் உள்ள பூஜை அறையில், கடவுள்களுக்கு மாம்பழங்கள் கொண்ட சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
உலகமே கவனிக்கும் செல்வந்தர் முகேஷ் அம்பானியின் வீட்டில் ஒரு செயற்கை குளிர்பதன அமைப்புகள் எதுவம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.