Viral Video: எப்படி வந்து சிக்கிக்கிட்டேன் பார்த்தீங்களா?.. டூ வீலர் சக்கரத்தில் சிக்கி சின்னாபின்னமான குரங்கு..!

நமது மனம் அவ்வப்போது குரங்கு போல தாவி அதனை உறுதி செய்யும். ஆனால், குரங்கு செய்த சேட்டையால் டூவீலரில் வீலுக்குள் சிக்கிக்கொண்ட சோகம் தெரியுமா உங்களுக்கு?.

Viral Video: எப்படி வந்து சிக்கிக்கிட்டேன் பார்த்தீங்களா?.. டூ வீலர் சக்கரத்தில் சிக்கி சின்னாபின்னமான குரங்கு..!
Photo Credit: Twitter Screen Scrap

டிசம்பர், 10: குரங்கில் இருந்து (Humans from Monkey) மனிதன் பிறந்தான் என்பது உலகறிந்த விஷயம் என்றாலும், நமது மனம் அவ்வப்போது குரங்கு போல தாவி அதனை உறுதி செய்யும். சிறுகுழந்தைகள் சேட்டைகள் செய்தால் அவர்களிடம் குரங்கு சேட்டை செய்யாதே என்றும் நாம் கூறுவோம்.

இங்கு நிலைமை இவ்வாறு இருக்க, குரங்கு ஒன்று தனது சேட்டையினால் இருசக்கர வாகனத்தின் முன்புற சக்கரத்தில் தலையை விட்டு தவித்த சோகம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாராபன்கி என்ற பகுதியில் இருசக்கர வாகன தனது வாகனத்தை நிறுத்திவிட்டு கடைவீதிக்கு சென்றார். அந்த சமயம் அங்கு வந்த குரங்கு ஒன்று, இருசக்கர வாகனத்தின் முன்புற சக்கரத்தில் தலையை விட்டு வேடிக்கை காண்பித்தது. Remove Apps Form Phone: அச்சச்சோ.. இந்த Apps உங்க மொபைலில் உள்ளதா?.. உடனே டெலீட் பண்ணுங்க.. எச்சரிக்கை கொடுத்த கூகுள்.! 

அப்போது, எதிர்பாராத விதமாக அது பாதி உடலை சக்கரத்தின் வழியே கொண்டு சென்ற நிலையில், மீதி உடல் வெளியே வரவில்லை. இதனால் பதறிப்போன குரங்கு கதறித்துடிக்க, அங்கிருந்த பொதுமக்கள் சக்கரத்தை அகற்றி குரங்கின் உயிரை காப்பாற்றினர்.

லாரி டயருக்கு நடுவே சிக்கிக்கொண்டு வடிவேலு பாணியில் எப்படி வந்து சிக்கியிருக்கிறேன் பார்த்தியா? என தவித்த குரங்கு விடுபட்டதும் தப்பித்தால் போதுமென அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. குரங்கு சக்கரத்தின் நடுவே சிக்கியிருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 06:46 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(The above story first appeared on LatestLY on Jan 12, 2023 12:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).