Lady Doctor Raped: நண்பராக பழகி, கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம்: மதுவை ஊற்றிக்கொடுத்து நடந்த கொடுமை.!

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனியே வசித்து வரும் பெண் மருத்துவரை நண்பர் திட்டமிட்டு பழகி பலாத்காரம் செய்தார்.

Lady Doctor Raped: நண்பராக பழகி, கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம்: மதுவை ஊற்றிக்கொடுத்து நடந்த கொடுமை.!
Sexual Harassment (Photo Credit: Pixabay)

நவம்பர் 16, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தெற்கு மும்பை, காம்தேவி பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர், தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் சமபவத்தன்று காமதேவி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில், "தனியர் மருத்துவமனையில் நான் வேலை பார்த்து வருகிறேன். எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நான் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். சம்பவத்தன்று மரைன் டிரைவ் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இறகுப்பந்து கிளப்பில் விளையாடிக்கொண்டு இருந்தேன். Nellai Junction Brokers Atrocity: கூடுதல் கட்டணம் வசூலித்து, கவுண்டருக்கு வெளியில் முன்பதிவு: நெல்லை சந்திப்பில் தட்கல் பயணிகளிடம் அடாவடி வசூல்.! அதிர்ச்சி விபரம் அம்பலம்.! 

அப்போது, 38 வயதுடைய நபர் எனக்கு அறிமுகமானார். அவருடன் நான் இயல்பாக பழகி வந்தேன். சம்பவத்தன்று என்னுடன் பேசியவர், குடிக்க குளிர்பானத்தை கொடுத்தார். அதில் முன்னதாகவே மதுபானம் கலந்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை அறியாமல் நான் குடிக்க, அவர் என்னை எனது வீட்டிற்கு காரில் அழைத்துச்சென்று போதையில் நான் மயங்கிய நிலையில் இருந்தபோது பலாத்காரம் செய்தார்.

இதனை வீடியோவாக எடுத்து வைத்தவர், என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார். மேலும், என்னை பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளதை காண்பித்தும் மிரட்டியதால், முதலில் பயந்துபோன நான் பணம் கொடுத்தேன். தற்போது மேலும் பணம் கேட்டு மிரட்டுகிறார். எனது கணவர், நண்பர்களுக்கு ஆபாச வீடியோ அனுப்புவதாகவும் கூறுகிறார். அவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெண் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, 38 வயது நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

(The above story first appeared on LatestLY on Nov 16, 2023 10:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).