Girl Raped on Running Train: ஓடும் இரயிலில் 20 வயது மாணவிக்கு கதறக்கதற நடந்த பயங்கரம்; 40 வயது கூலித்தொழிலாளி வெறிச்செயல்.!
பெண்கள் பெட்டியில் ஏறி பயணித்த கயவன், மாணவி தனியே இருப்பதை கண்டு அரங்கேற்றிய கொடுமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 15, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சத்ரபதி சிவாஜி இரயில் நிலையத்தில் இருந்து மஸ்ஜித் இரயில் நிலையம் நோக்கி நேற்று மும்பை புறநகர் இரயில் பயணம் செய்தது.
காலை சுமார் 07:26 மணியளவில் இரயில் புறப்பட்டு பயணம் செய்த நிலையில், இரயிலில் 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி பெண்கள் பெட்டியில் தனியே பயணம் செய்துள்ளார்.
அதே பெட்டியில் உள்நோக்க எண்ணத்துடன் கூலி தொழிலாளி நவாஸு கரீம் (வயது 40) என்பவரும் பயணம் செய்துள்ளார். இரயில் புறப்பட்ட சில நொடிகளிலேயே கயவன் கல்லூரி மாணவியை பலவந்தப்படுத்தி ஓடும் இரயிலில் (Girl Raped on Running Train)பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி அடுத்த இரயில் நிலையத்தில் இறங்கி இரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கயவன் தப்பிச்சென்று இருக்கிறான். விசாரணையை முன்னெடுத்த காவல் துறையினர், 8 மணிநேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிக்கு கடும் தண்டனை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
(The above story first appeared on LatestLY on Jun 15, 2023 02:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

