Thane Dog Attack: குழந்தையை கொடூரமாக தாக்கிய நாய்கள்; பூங்காவுக்குள் நடந்த பயங்கரம்.. பதைபதைப்பு காட்சிகள் வைரல்.!

பூங்கா போன்ற பொது இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, நாம் கவனமாக இருக்க வேண்டும்.

Thane Dog Attack: குழந்தையை கொடூரமாக தாக்கிய நாய்கள்; பூங்காவுக்குள் நடந்த பயங்கரம்.. பதைபதைப்பு காட்சிகள் வைரல்.!
Visual From Video (Photo Credit: X)

அக்டோபர் 24, தானே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தானே லோதா அமரா காம்ப்ளக்ஸ் பூங்காவில் நேற்று சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த நாய்கள் கூட்டம், திடீரென சிறுமியை விரட்டி கொடூரமாக தாக்க முயற்சித்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

நாயையும் அவர்கள் விரட்டியடித்த நிலையில், உதவிக்கு யாரும் முன்வராமல் இருந்திருந்தால் சிறுமியை நாய்கள் கடித்து குத்தறியிருக்கும். அவ்வாறான ஆக்ரோஷத்தில் நாய்கள் வந்தன. Sachin Wish to Team Afghanistan: பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு பாராட்டுகளை தெரிவித்த சச்சின்.! 

சிறுமி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். சிறுமியை நாய் தாக்கும் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

பூங்கா போன்ற பொது இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வீடியோ உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

(The above story first appeared on LatestLY on Oct 24, 2023 11:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).