Traffic Cop Drags: போக்குவரத்து காவலரை 10 கி.மீ தூரம் காரின் மேலே வைத்து ஓட்டிச்சென்ற போதை ஆசாமி; பரபரப்பு சி.சி.டி.வி காட்சிகள் வைரல்.!
கடமையை செய்துகொண்டு இருந்த காவல் அதிகாரியை, மதியம் 2 மணியளவில் சோதனைக்கு பயந்து கொலை முயற்சி சம்பவத்தில் இறங்கிய வாகன ஓட்டி, 10 கிமீ பயணத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.
ஏப்ரல் 17, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை (Mumbai, Maharashtra), வின்ட்ஷீல்டு (Windshield) பகுதியை சேர்ந்தவர் ஆதித்ய பேம்ப்டே (Aditya Bembade). இவர் சம்பவத்தன்று வின்ட்ஷீல்டு பகுதியில் தனது காரை இயக்கி வந்துள்ளார். காரை அவர் போதையில் இயக்கியதால் சாலையில் அங்கும் இங்குமாக இயங்கியுள்ளது.
அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து காவலர் சித்தேஷ்வர் மாலி (Siddheshwar Mali), காரை நிறுத்த முயற்சித்துள்ளார். அச்சமயத்தில் திடீரென அதிவேகத்தில் காரை இயக்கிய ஆதித்யா, அங்கிருந்து 10 கி.மீ தூரத்திற்கு காரின் மேல் பாய்ந்து உயிரை காப்பாற்றிக்கொண்ட காவலரோடு பயணம் செய்துள்ளார். Jagadish Shettar: நேற்று பாஜக, இன்று காங்கிரஸ்.. முன்னாள் முதல்வரின் கட்சி மாற்றம் குறித்து கர்நாடக காங்., தலைவர் கருத்து.!
சுமார் 10 கி.மீ தூரம் தொடர்ந்த உரான் நாகா என்ற நகரில் சென்று முடிந்துள்ளது. போதையில் காரை இயக்கி வந்த ஆதித்யாவை கைது செய்த காவல் துறையினர், அவரின் மீது கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
Watch: High On Drugs, Man Drags Traffic Cop On Car's Windshield For 10 km In Maharashtra
Read here: https://t.co/1vEbl6k80l pic.twitter.com/WDtVzq6gc5
— NDTV Videos (@ndtvvideos) April 16, 2023
(The above story first appeared on LatestLY on Apr 17, 2023 03:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

