Delhi Shocking Murder: 16 வயது காதலி 20 முறை கத்தியால் குத்தி, சிமெண்ட் கல்லால் தாக்கி கொடூர கொலை; நெஞ்சை உலுக்கும் சம்பவம்.. அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி காட்சிகள்.!

தனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத காதலியை ஆத்திரத்தில் இளைஞன் கல்லால் தாக்கி கொலை செய்த பயங்கரம் நெஞ்சை பதறவைத்துள்ளது. இதன் அதிர்ச்சி காட்சிகள் சி.சி.டி.வி-யில் பதிவாகி வெளியாகியுள்ளன.

Delhi Shocking Murder: 16 வயது காதலி 20 முறை கத்தியால் குத்தி, சிமெண்ட் கல்லால் தாக்கி கொடூர கொலை; நெஞ்சை உலுக்கும் சம்பவம்.. அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி காட்சிகள்.!
Visual Captured from CCTV Footage (Photo Credit: Twitter)

மே 29, புதுடெல்லி (New Delhi Crime News): புதுடெல்லியில் உள்ள ஷாஹ்பாத் டைரி, ஜெஜெ காலனி பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். சிறுமியும் - சாஹில் என்ற 20 வயது இளைஞர் ஒருவரும் காதலித்து வந்ததாக தெரியவருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே காதல் ஜோடிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கிறது. சம்பவத்தன்று சிறுமி தனது நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, அங்கு வந்த சிறுமியின் காதலன், சிறுமியை இடைமறித்து வாக்குவாதம் செய்துகொண்டு இருந்தான். வாக்குவாதத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற இளைஞன், சிறுமியை சற்றும் எதிர்பாராத வகையில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். Paramilitary Officer: “என்னோட பேக்-கை திருடிட்டாங்க.. திருச்சி போலீஸ் கண்டுகொள்ளவில்லை” – துணை இராணுவ வீரர் பகீர் குற்றசாட்டு..! சரமாரி கேள்வி…! 

இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த சிறுமியை, அங்கிருந்த பெரிய அளவிலான சிமெண்ட் கல் எடுத்து பலமுறை அவரின் உடலில் தூக்கி போட்டு கொடூரமாக கொலை செய்தான்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி சாலையோரம் கயவனால் கொல்லப்பட்ட நிலையில், கற்களை தூக்கி அடிக்கும் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரும் கயவனை தடுக்க முன்வரவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுமி எத்தனை முறை கத்தி, கற்களால் தாக்கப்பட்டார் என்ற தகவலை தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

(The above story first appeared on LatestLY on May 29, 2023 02:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).