Minor Girl Gang Rape: இன்ஸ்டாகிராம் பழக்கம்; 13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்கள்..!

மத்திய பிரதேசத்தில் 13 வயது சிறுமியை, ஓடும் காரில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அந்த வீடியோவை வாலிபர் ஒருவர் உறவினர்களுக்கு அனுப்பியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Minor Girl Gang Rape: இன்ஸ்டாகிராம் பழக்கம்; 13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்கள்..!
Gang Rape (Photo Credit: Pixabay)

ஜூலை 19, குவாலியர் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் பகுதியை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கும், சீனுரை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், அந்த வாலிபர் தனது மற்ற நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர், இவர்கள் 3 பேரும் தொடர்ந்து பேசி பழகி வந்துள்ளனர். Coconut Benefits: தேங்காயில் உள்ள நன்மைகள் என்னென்ன..? முழு விவரம் உள்ளே..!

இந்நிலையில், சிறுமியை காரில் அழைத்துச் செல்வதாக கூறி, ஆக்ரா-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் குவாலியரில் இருந்து ஷிவ்புரி செல்லும் சாலையில் ஓடும் காரில் வைத்து சிறுமியை அவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் (Gang Rape) செய்துள்ளனர். மேலும், அதனை வீடியோவும் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடந்துள்ளது. மேலும், இதுகுறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டியுள்ளனர். இதன்பிறகு, சிறுமியை அடிக்கடி தொடர்பு கொண்டு அழைத்துள்ளனர். இதற்கு சிறுமி வர மறுத்ததை அடுத்து, நேற்றைய தினம் அந்த வாலிபர் எடுத்து வைத்திருந்த ஆபாச வீடியோ காட்சிகளை சிறுமியின் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் பலருக்கு அனுப்பி உள்ளார்.

இதனையடுத்து, சிறுமி தனது குடும்பத்தினரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து, மோகனா காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சீனுர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாகியுள்ள அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jul 19, 2024 06:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).