Man Chops Off Tongue: கடவுளுக்கு பூஜை செய்ய நாக்கை அறுத்த நபர்.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!
சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில், 33 வயது நபர் ஒருவர், கடவுளுக்கு பூஜை செய்ய நாக்கை அறுத்துக்கொண்டார்.
மே 08, சத்தீஸ்கர் (Chhattisgarh News): சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்வர் நிஷாத் (வயது 33). இவர் இன்று அவர் கிராமத்தில் உள்ள ஒரு குளத்திற்குச் சென்று, சில மந்திரங்களைச் சொல்லி, தனது நாக்கை கத்தியால் அறுத்து, நீர்நிலையின் கரையில் உள்ள ஒரு கல்லில் வைத்துள்ளார். பின்னர் கோவிலுக்குச் சென்று மந்திரங்களை கூறியுள்ளார். கோயிலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரைக் கண்ட கிராம மக்கள், ஆம்புலன்ஸ் வரவழைத்து, அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். TN Weather Report: இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
இத்தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் கிராமவாசிகளிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அதன்படி நிஷாத்தின் மனைவி பேச முடியாமல் இருப்பதால், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்க அவர் தனது நாக்கை தியாகம் செய்தார், இருப்பினும் உண்மையான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவம் மூடநம்பிக்கையின் காரணமாகத் தெரிகிறது என்று காவல்துறையினர் கூறினர். நிஷாத் பயன்படுத்திய கத்தியை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
(The above story first appeared on LatestLY on May 08, 2024 04:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

