Teenager Stabb To Death: 17 முறை சதக்., சதக்.. இளைஞர் சரமாரியாக குத்திக்கொலை.‌. நெஞ்சை நடுநடுங்க வைக்கும் பயங்கரம்..!

டெல்லியில் இளைஞர் ஒருவர் 17 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

Teenager Stabbed To Death (Photo Credit: @lavelybakshi X)

ஜூலை 24, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில், பஜன்புரா பகுதியில் உள்ள காம்ரியில் சுமித் சவுத்ரி என்பவர் அவரது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் சுமித்தை கத்தியால் (Stabbed To Death) சரமாரியாக குத்தியுள்ளார். இச்சம்பவம் கடந்த ஜூலை 11-ஆம் தேதி அன்று நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சுமித், முகம், கழுத்து மற்றும் வயிற்றில் 17 முறை தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர், அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றது. Radish Benefits: நீர்ச்சத்து நிறைந்த முள்ளங்கியில் உள்ள பயன்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், படுகொலை (Murder) செய்யப்பட்ட சுமித் சவுத்ரி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கொலை வழக்கில் கர்தார் சிங், ஹுசைன் அலி, ஷைனா மற்றும் ஆஷு ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான சல்மானை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement