நவம்பர் 28, மஸ்கோ (World News): ரஷ்யாவில் ஓரென்பர்க் பகுதியில் வசித்து வரும் நபர் டிமிட்ரி நுயான்ஸின் (வயது 30). இவர் உடற்பயிற்சி ஆலோசகர் மற்றும் சமூக வலைதள பிரபலம் ஆவார். உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்வது தொடர்பான பல்வேறு வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பிரபலமாகி இருக்கிறார். இவர் சுமார் 104 கிலோ உடல் எடையை விரைந்து 90 கிலோவுக்கு குறைந்து, அதனை கட்டுமஸ்தான் போல மேம்படுத்தியும் இருக்கிறார். ஆன்லைனில் பல சவால்களையும் மேற்கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. Sri Lanka Floods: டிட்வா புயலின் கோரம்.. 56 உயிர்களை பறித்த கனமழை.. இலங்கையில் சோகம்.!
உடல் எடையில் அதிரடி மாற்றம் இறுதியில் மரணம்:
இதனிடையே, இவர் விரைந்து உடல் எடையை அதிகரித்து, பின் மீண்டும் குறைப்பது தொடர்பான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இதற்காக அவர் துரித உணவுகளை அதிகமாக சாப்பிட்டு வந்துள்ளார். அதிக கலோரிகள் கொண்ட உணவை அளவுக்கு அதிகமாக தேடித்தேடி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. மொத்தமாக நாளொன்றுக்கு சுமார் 10,000 கலோரிகள் வீதம் அவர் உட்கொண்டதை வீடியோவும் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இதனால் அவரது உடல் எடை காரணமாக இதய செயலிழப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். உடல் எடையை விரைந்து குறைத்து பின் 25 கிலோ அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். ஒரே மாதத்தில் 13 கிலோவுக்கு மேல் அதிகரித்து இருக்கிறார். இதனால் உடல்நலம் திடீரென மாற்றத்துக்கு உள்ளாகி உறக்கத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உடல் எடை குறைப்பு விஷயத்தில் கவனமாக செயல்படவில்லை என்றால், எந்த மாதிரியான விளைவு ஏற்படும் என்பதற்கு உதாரணமாக உடற்கல்வியில் தகுதி பெற்ற நபரே தனது மரணத்தை உதாரணமாக விட்டுச் சென்றுள்ள சம்பவம் ஆர்வக்கோளாறில் ஜிம்முக்கு சென்று இஷ்டத்துக்கு உடற்பயிற்சிகளை செய்யும் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை பாடம் ஆகும்.