Woman Stabs Husband: கிப்ட் கொடுக்காத கணவன்.. தூங்கும் போது கத்தியால் குத்திய மனைவி..!

பெங்களூரில் திருமண நாள் பரிசு கிடைக்காததால், கணவர் உறங்கிக் கொண்டிருந்தபோது, ​​மனைவி கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman Stabs Husband: கிப்ட் கொடுக்காத கணவன்.. தூங்கும் போது கத்தியால் குத்திய மனைவி..!
Woman Stabs Husband (Photo Credit Pixabay)

மார்ச் 05, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூரில் (Bengaluru) உள்ள டெக் காரிடாரில் பகுதியில் ஒரு தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று இவர்களுக்கு திருமண நாள் கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது கணவர் எந்த ஒரு பரிசும் கொடுக்காததால் மனைவி ஆத்திரமடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது கணவர் தூங்கும் பொழுது, சமையலறை கத்தியை எடுத்து (homemaker stabbed her husband) குத்தியுள்ளார். திடீரென முழித்த கணவர், பயத்தில் மனைவியைத் தள்ளி விட்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். C-Vigil Citizens be Vigilant: தேர்தல் ஆணையத்தின் புதிய ஆப்.. இனி தேர்தல் அசம்பாவிதம் செய்வோர்க்கு 100 நிமிடத்தில் ஆப்பு..!

இத்தகவல் அறிந்த காவல் துறையினர் அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்போது முதற்கட்ட விசாரணையில் அந்த பெண்ணின் கணவர், அவரது தாத்தா முதல் நாள் இறந்ததால், மறுநாள் திருமண நாளிற்கு கிப்ட் கொடுக்க மறந்ததாகவும், இது தான் முதல் முறையாக நான் கிப்ட் கொடுக்காமல் இருந்ததாகவும், இதனால் வருத்தத்தில் தன் மனைவி இவ்வாறு செய்து விட்டதாகவும், அவர்க்கு சிகிச்சை அளிக்குமாறும் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

(The above story first appeared on LatestLY on Mar 05, 2024 02:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).