Andhra Pradesh Shocker: 5 வயது சிறுமியை கற்பழித்த 18 வயது இளைஞர்.. ஆந்திராவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..!
ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 25, பல்நாடு (Andhra Pradesh News): ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் உள்ள நரசரோபேட்டா நகரில் 18 வயது இளைஞர் ஒருவர் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நரசராவ்பேட்டை ஊரக காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் நேற்று புகார் அளித்தனர். How to Move On After One-Sided Love: "உண்மையான காதல் என்றும் மறைவதில்லை".. ஒருதலைகாதலில் இருந்து விடுபட என்ன செய்யலாம்?.. வழிமுறைகள் இதோ.!
அதனைத் தொடர்ந்து, குற்றவாளி சந்து மீது, காவல் துறையினர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் அவரை காவல் துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் நரசராய்பேட்டை ஊரக சப்-இன்ஸ்பெக்டர் ரோசய்யா தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
(The above story first appeared on LatestLY on Jun 25, 2024 03:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

