Delhi Air Pollution: மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்.. கிராப் திட்டத்தின் 4 வது நிலை கட்டுப்பாடுகள் அமல்..!

தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Delhi Air Pollution: மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்.. கிராப் திட்டத்தின் 4 வது நிலை கட்டுப்பாடுகள் அமல்..!
Delhi Air Pollution (Photo Credit: X)

நவம்பர் 18, புதுடெல்லி (New Delhi): வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அதேசமயம் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தொடங்கி ஜனவரி இறுதி வரை காற்று மாசு (Air Pollution) பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர சராசரியின்படி இன்று காலை 6 மணியளவில் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 458 என்றளவில் இருந்தது. இந்த அளவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். Bangalore Businessman Dies: கார் தீப்பிடித்து எரிந்து தொழிலதிபர் மூச்சுத்திணறி பலி; பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்.. பகீர் வீடியோ.!

இதனால், கிராப் திட்டத்தின் 4 வது நிலை கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக அந்த மாநில முதல்வர் அதிஷி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "10, 12ம் வகுப்புகளை தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும். அனைத்து கட்டுமான பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி, பிஎஸ் -4 பெட்ரோல் வாகனங்கள் மட்டும் டெல்லிக்கு வர அனுமதி அளிக்கப்படுகிறது. பிஎஸ் 3 பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. மாநில அரசு, மாநகராட்சி ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

காற்று தரக் குறியீட்டில் 0 முதல் 50 வரை இருந்தால் காற்று தரத்துடன் உள்ளது என்றும், 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் இருக்கும். இதே போல், 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம் என்றும், 201 முதல் 300 வரை இருந்தால் மோசம் என்றும், 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசம் மற்றும் 401 முதல் 500 வரை இருந்தால் மிகவும் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Nov 18, 2024 10:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).